Sunday, October 9, 2011

நயாகராவில் ஓர் இலக்கியச் சந்திப்பு













எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தோடு ஒரு வாசகன் என்ற முறையிலும் காலச்சுவடின் பொறுப்பாசிரியர் என்ற முறையிலும் பல வருடங்களாக அறிவேன். காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற பிறகு மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு ஏற்பட்டது. சிறுகதை என் விருப்பத்திற்குரிய வடிவம் என்பதால் அவருடைய கதைகளை விரும்பிப்படிப்பேன்.


கடந்த அக்டோபர் 4ஆம் தேதி நயாகர நீர்வீழ்ச்சியின் முன்பு அவரைச் சந்திக்க முடிந்தது. எழுத்தாளர் முகாம் ஒன்றுக்காக நான் அமெரிக்கா வருவதாகச் சொன்னதும் கனடாவின் டொரொண்டோவில் வசிக்கும் காலம் செல்வம் கனடாவுக்கு அழைத்தார். விசா பெற முடியாததால் அந்தப் பயணம் கைகூடவில்லை. பிறகு அவரது அழைப்பின் பேரில் நயாகரா சென்றேன்.


செல்வம், அ.முத்துலிங்கம் மற்றும் டொரொண்டோவில் வசிக்கும் ஈழத்து இலக்கிய நண்பர்கள் இருவருடன் நயாகராவில் ஒரு அருமையான சந்திப்பு வாய்த்தது.


நயாகராவிலுள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொணடிருந்தோம். நண்பர்கள் மிகக் குறைவாகவே பேசினார்கள். என்னைப் பேச அனுமதித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதமாகத் தமிழே பேச வாய்க்காத நான் பொழிந்து தள்ளிவிட்டேன்.


என் பால்ய காலம் குறித்து எழுதுவதைப்பற்றிய யோசனைகளில் ஆழ்ந்திருந்ததால் அதைப் பற்றித்தான் பேச்சு.


அருமையான சந்திப்பு என நண்பர்கள் சொன்னார்கள். அதைப்பற்றி விரிவாக எழுத எண்ணம். ஆகவே இந்தப் பதிவை நீட்டிக்க விரும்பாமல் அவர்களுடன் நயாகராவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் பதிந்திருக்கிறேன்.







1 comment:

  1. //நண்பர்கள் மிகக் குறைவாகவே பேசினார்கள். என்னைப் பேச அனுமதித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதமாகத் தமிழே பேச வாய்க்காத நான் பொழிந்து தள்ளிவிட்டேன்.// ஒரு மாதமா தமிழ் பேசாததால் மட்டும்தான் பொழிந்து தள்ளிவிட்டீர்களா? இல்லேனா அமைதியா இருந்திருப்பீங்க இல்லையா?? :)

    ReplyDelete