My short story in English http://www.caravanmagazine.in/Story.aspx?StoryId=1136#
காலச்சுவடில் வந்த என் நெடுங்கதை பிறகொரு இரவு (2008, ஜனவரி). இக்கதையின் ஆங்கில மொழி பெயர்ப்பு இது, திரு. கல்யாணராமன் மொழி பெயர்ப்பில் 2011 நவம்பர் இதழில் வெளிவந்தது, காலச்சுவடில் வந்தபோது பெரும் கவனம் பெற்றது. அந்த மாதம் முழுவதும் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள். அப்போது பெரும்பாலும் அலுவலகத்தில் இருப்பேன். சில நாள்களில் நான்கைந்து பேர் அழைத்துப் பேசுவார்கள். அதைப்பற்றி என் அலுவலக நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். அப்போது திவாகர் ரங்கநாதன் இணை ஆசிரியர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். பிறகொரு இரவு சிறுகதையைப் பாராட்டி எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளைப் பற்றி நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் கடுப்பாகிவிட்டார் என நினைக்கிறேன். ஒரு நாள் கேட்டார், தேவிபாரதி, இன்னும் உங்களுக்கு காந்தியிடமிருந்து போன் வரலையா என்ன?
நான் ஆடிப்போய்விட்டேன். கண்ணனுக்குப் பிடித்த கமெண்ட் இது.
கண்ணனுக்குப் பிடித்த நான் சொன்ன மற்றொரு கதை கீழே.
எனக்கு 30வயதுவரை ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் இருந்ததில்லை. அப்போது 1987இல் தாஸ்த்தயேவ்ஸ்கியின் இடியட் இலக்கிய வாசகர்களிடையே மிகப் பிரபலம். ஆனால் நல்ல தமிழ் மொழி பெயர்ப்பு இல்லை. ஆங்கில வாசிப்புப் பழக்கம் கொண்ட இலக்கிய நண்பர்கள் அதைப்பற்றிச் சொல்லிக் கடுப்பேற்றிக்கொண்டிருந்தார்கள.
வெறும் எஸ்எஸ்எல்சி படித்திருந்த எனக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம்கூட எழுதத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இடியட் நாவலை ஆங்கிலத்தில் படித்துவிட வேண்டும் என ஒரு பேராசை ஏற்பட்டது.
அப்போது நாங்கள் குடியிருந்த சிவகிரி (ஈரோடு சிவகிரி)யில் ஒரு நல்ல நூலகம் இருந்தது. அதில் Everymen's Library வெளியிட்ட Idiot, Anna krenina, Crime and punishment என எல்லா கிளாசிக்குகளும் தீண்டப்படாதவையாய் அலமாரிகளில் கிடந்தன. நூலகரிடம் கேட்டு எல்லாவற்றையும் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி ஒன்றின் உதவியுடன் Idiot நாவலைப் படிக்கத் தொடங்கினேன். மிகக் கஷ்டப்பட்டு ஒரு மாதத்திற்குள் படித்து முடித்தேன். அப்போது என்னைப் பார்க்க வந்த நண்பர் ஒருவர் (பெயர் சண்முகம், நல்ல வாசிப்புப் பழக்கம் கொண்டவர். இடியட்டை முன்னரே ஆங்கிலத்தில் வாசித்திருந்தவர்) அதைப் பற்றிக் கேட்டார். விவரம் தெரியாமல் நான் அவருக்கு நான் படித்த இடியட் நாவல் பற்றிச் சொல்லத் தொடங்கினேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த நண்பர் கடைசியில் சொன்னது,
கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இதை நீங்கள் எழுதுங்கள். தாஸ்த்தயேவ்ஸ்கியின் இடியட் வேறு கதை. அதனால் பிரச்சினை வராது.
எழுதலாம் என்றுதான் நினைக்கிறேன்.

No comments:
Post a Comment